» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி மாவட்டம் காலத்தின் கட்டாயம்: காலதாமதம் வேண்டாம்!
ஞாயிறு 10, செப்டம்பர் 2023 10:16:01 AM (IST)
கோவில்பட்டி வருவாய் மாவட்டம் காலத்தின் கட்டாயம், காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆ.சம்பத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கும், கடலை மிட்டாய் தொழில்களுக்கும் தனித்த அடையாளத்தைப் பெற்று வெகு வேகமாக வளர்ந்து வரும் தொழில்நகரம் கோவில்பட்டியாகும்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி இருப்புப்பாதை அமையப்பெற்று போக்குவரத்து வசதியில் தென் தமிழ்நாட்டில் தன்னிகரற்ற நகராகவும் விளங்குகிறது கோவில்பட்டி.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என பலவகைப்பட்ட கல்வி நிலையங்களும் அமையப்பெற்ற ஊர் கோவில்பட்டி.
ஹாக்கி விளையாட்டிற்கும் பல்வகை படைப்பாளிகளுக்கும் பெயர்பெற்ற ஊர் கோவில்பட்டி.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பல்வகை நோய்களுக்கும் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய தனியார் மருத்துவமனைகளும் நிரம்பிய ஊர் கோவில்பட்டி.
சட்டமன்றத் தொகுதி, கோட்டம், வட்டம், ஒன்றியம், நகராட்சி, கல்வி மாவட்டம், என பலவகைப்பட்ட நிர்வாக கட்டமைப்புமிக்கது கோவில்பட்டி நகரம்.
நகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு, தோனுகால், நாலட்டின்புதூர், இலுப்பையூரணி, கூசாலிபட்டி, போன்ற கோவில்பட்டியை ஒட்டியுள்ள ஊராட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேலான மக்கள் வாழ்கிற மாநகர் கோவில்பட்டி.
கோவில்பட்டி, விளாத்திகுளம், மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய வருவாய் மாவட்டமாக கோவில்பட்டி அமைவது என்பது காலத்தின் கட்டாயம். அரசியல் காரணங்களுக்காக கோவில்பட்டி மாவட்டம் அறிவிப்பு தள்ளிப்போடப் படுவதாக அரசியல் விமர்சர்கள் கருதுகின்றனர். ஏனெனில், கோவில்பட்டி மாவட்டத்திற்கான முன்னெடுப்பு கடந்த மூன்று முறை இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஆசிரியப்பெருந்தகை கடம்பூர்.செ.ராஜூ முன்னெடுத்ததால் இப்போது அறிவிப்பு வரும் பட்சத்தில் அதன் பலன் ஆளும் கட்சியைவிட சட்டமன்ற உறுப்பினருக்கே அதிகமாகச் செல்லும் என்றும் அரசியல் விவரம் கூறுகின்றனர். அதேநேரம் ஆளுங்கட்சி தரப்பிலோ புதிய வருவாய் மாவட்டம் அமைவதற்கான பூர்வாங்க வேலைகள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.
கோவில்பட்டி புதிய வருவாய் மாவட்டமாக உருவாகும் பட்சத்தில் அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோவில்பட்டிக்குக் கிடைக்கும். மக்கள் எளிதில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் உள்ள அரசு அதிகாரிகளை அணுக முடியும். புதிய புதிய நியமனங்கள் மற்றும் கட்டிடங்கள் உருவாகும். கோவில்பட்டியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வளரும்.
எனவே, அரசியல் காரணங்களுக்காக கோவில்பட்டி மாவட்டம் அமைவதை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தக்கூடாது என்ற வேண்டுகோளை கோவில்பட்டி மக்கள் முன்வைக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வரும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் அறிவார்ந்த பெருமக்கள் அணிசேர்ந்து தமிழ்நாடு அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்க வேண்டும்.
நிர்வாக வசதி மேம்பட மக்கள் அரசின் திட்டங்களின் பலன்களை முழுமையாக மற்றும் விரைவில் பெற கோவில்பட்டி மாவட்டம் உருவாக வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆ.சம்பத்குமார், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
சண்முகம்Sep 13, 2023 - 07:20:35 AM | Posted IP 172.7*****
மாவட்டமாக மாற்ற மாவட்ட நீ
திமன்ற வளாகம் ஆட்சியர் வளாகம் தொழிற்பேட்டை மற்றும் பலவற்றுக்கு நிலங்கள் மற்றும் புதிதாக அரசுபணிக்கு ஆட்கள் தேர்வு ( தற்போதே ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது)செய்ய வேண்டும்.மாவட்ட மக்கள்தொகை வட்டங்கள் ஒன்றியங்கள் சட்டமன்ற தொகுதிகள்( பாஜக விரும்பும் மக்களவை உறுப்பினர் விரிவாக்கம் )மக்களவை தொகுதி புதிய மாவட்ட புதிய தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கி புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.நிதி இல்லை என்றால் கைவிடவேண்டும்.
அய்யப்ப நாயக்கர்Sep 12, 2023 - 12:22:12 PM | Posted IP 172.7*****
கோவில்பட்டி மாவட்டத்தில் திருவேங்கடம் வட்டம் முழுவதையும் இணைக்க இந்த முன்வர வேண்டும்...
sivaSep 12, 2023 - 10:47:31 AM | Posted IP 172.7*****
I request by in Comforting district with Kovilpatti
Venkadasalapathy vSep 12, 2023 - 10:28:59 AM | Posted IP 172.7*****
கோவில்பட்டி மாவட்டம் ஆனால் மதிமுக நாய்க்கர்களின் அராஜகம் அதிகரிக்கும் மற்ற சாதிமற்றவர்கள் மிதிக்கப்படுவார்கள்.
சிவா கோவில்பட்டிSep 11, 2023 - 10:28:50 PM | Posted IP 172.7*****
பல நண்பர்கள் கூறியது போல் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சர்க்கிள் பஸ் இயக்கி பயணிகளின் பெரும் சர்பத்தை போக்கினால் சிறப்பாக இருக்கும்
Krishna moorthiSep 11, 2023 - 09:23:06 PM | Posted IP 172.7*****
கோவில்பட்டி மாவட்டம் கண்டிப்பாக வேண்டும்.
R.திரவியம்Sep 11, 2023 - 07:38:19 PM | Posted IP 172.7*****
R.திரவியம்.கோவில்பட்டிமாவட்டம்அமைவதுகாலத்தின்கட்டாயம்பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது அரசின் கடமை ஆகவே விரைவாக கோவில் பட்டி மாவட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டு கொள்கிறேன்
MITHUNSep 11, 2023 - 05:45:59 PM | Posted IP 172.7*****
மாவட்டம் ஆனால் தான் கோவில்பட்டி முன்னேறும்
இ.இரத்தினசாமி ராமாபுரம் சென்னை 89Sep 11, 2023 - 01:59:51 PM | Posted IP 172.7*****
ஆர்வலர் ஆ.சம்பத்குமார் அவர்களின் கருத்து ஒட்டுமொத்த கோவில்பட்டி வட்டார மக்களின் கருத்தையும் தென்தமிழ் நாட்டு மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. அன்னாரின் கருத்து பாராட்டுக்குரியது. அவர் கூறியது போல் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்த நகரம் கோவில்பட்டி என்பதில் ஐயமில்லை. தென்காசி போன்ற நகரங்களில் கோட்டாச்சியர் அலுவலம் வரும் முன்னரே கோவில்பட்டிக்கு 1969 களில் கோட்டாட்சியர் அலைவலகம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழில் வளமும் விளைநிலவளமும் ஒருங்கே அமைய பெற்றதால் கோவில்பட்டி மாவட்டம் ஆக அந்தஸ்து பெறும் பட்சத்தில் நிச்சயமாக கோவில்பட்டி நகரம் அசுர வளர்ச்சி பெறும்.
சுரேஷ்Sep 11, 2023 - 09:46:10 AM | Posted IP 172.7*****
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அணைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கரானாவுக்கு பிறகு 10 ரயில்கள் நிற்காமல் செல்கிறது இதை கவனிக்க யாரும் முயற்ச்சி செய்யவில்லை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்தை வஞ்சித்து வருகிறது
PetthanayagiSep 11, 2023 - 08:59:48 AM | Posted IP 172.7*****
Na கோவில்பட்டி தான் எங்க ஊரு நல்ல நிலமை அடையும்
கவுதமன்Sep 11, 2023 - 08:49:55 AM | Posted IP 172.7*****
கடம்பூர் ராஜீ MLA ஆக இருக்கும் வரை அந்த தொகுதியை முன்னெற்ற பாதைக்கு விட மாட்டான். போன அதிமுக ஆளும் போது மாவட்ட ஆக அறிவிக்க முட்டு கட்டை போட்டவன் இந்த கடம்பூர்
BalasubramaniamSep 11, 2023 - 08:15:59 AM | Posted IP 172.7*****
First, To give a bus fro new bus stand to old bus stand throughout the day will help the public
9994931878Sep 11, 2023 - 07:38:49 AM | Posted IP 172.7*****
Kovilpatti புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் ஊருக்குள் வர பஸ் வசதி உள்ளதா.இல்லை எனில் இரவு10மணிக்கு மேல் திருநெல்வேலிக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உள்ளதா மாவட்ட தலை நகரத்தை சீர் செய்யும்.
RPKPRSep 11, 2023 - 06:44:11 AM | Posted IP 172.7*****
அருமையான பதிவு காலத்தின் கட்டாயம் கோவில்பட்டி தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்கவேண்டும்
Srinivasa Murthy ArunachalamSep 10, 2023 - 09:11:53 PM | Posted IP 172.7*****
அனைவருக்கும் பயனும் பெருமையும் அமையும் வகையில் கோவில்பட்டி மாவட்டம் விரைவில் அமைய வாழ்த்துகின்றேன்.
Gnanaguru Samy TSep 10, 2023 - 08:49:09 PM | Posted IP 172.7*****
கண்டிப்பாக இதை செய்யவேண்டும்
அழகுராஜ் புதுகிராமம் கோவில்பட்டிJan 19, 2024 - 12:08:35 PM | Posted IP 172.7*****