» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பராமரிக்க ஆளில்லை: முதியவர் தற்கொலை!!

வியாழன் 25, மே 2023 11:42:15 AM (IST)

சாத்தான்குளம் அருகே தன்னை பராமரிக்க ஆளில்லை என்ற ஏக்கத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வெள்ளரிக்காய் ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் மந்திரமூர்த்தி (65). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். ஆனால் கடந்த ஆறு மதங்களுக்கு முன்பு மகனும் ஒரு விபத்தில் இறந்து விட்டாராம்.

இதனால் தன்னை பராமரிக்க ஆளில்லை என்ற ஏக்கத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

king makerமே 25, 2023 - 01:44:30 PM | Posted IP 172.7*****

ennapa seiya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education



New Shape Tailors







Thoothukudi Business Directory