» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்ற வாலிபர் கொலை : கொள்ளையர்கள் 2பேர் கைது
புதன் 24, மே 2023 1:34:16 PM (IST)
புதியம்புத்தூர் அருகே லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்ற வாலிபரை கொலை செய்த கொள்ளையர்கள் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கழுகாசலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார் (38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ் (22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்கா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

ivanungalaiமே 26, 2023 - 03:23:20 PM | Posted IP 162.1*****