» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி

திங்கள் 15, ஏப்ரல் 2024 3:39:39 PM (IST)

ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எம்.எஸ்.சி. ஏரீஸ் என பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. போர்ச்சுகீசிய கொடியுடன் கூடிய அந்த கப்பலில், இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்தோனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 25 மாலுமிகள் இருந்துள்ளனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த 3பேர் உட்பட இந்தியாவை சேர்ந்த 17 மாலுமிகளும் அடங்குவார்கள். இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள், அந்த கப்பலை சிறை பிடித்தனர். இந்த கப்பல் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவு துறை மந்திரி உசைன் அமீர்-அப்துல்லாஹியான் இன்று கூறும்போது, ஹார்முஜ் ஜலசந்தி பகுதியருகே ஈரான் ராணுவம் சிறை பிடித்த சரக்கு கப்பலில் இருந்த 17 இந்திய மாலுமிகளை சந்திப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி அளிக்கும் என கூறியுள்ளார்.

இதுபற்றி மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தொலைபேசி வழியே அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கப்பலில் உள்ள இந்தியர்களை விடுவிக்கும்படி ஜெய்சங்கர் கேட்டு கொண்டார்.

இந்தியர்களுடைய நிலைமை கவலை அளிக்கிறது என தெரிவித்ததுடன், இந்த விசயத்தில் ஈரான் உதவி மேற்கொள்ளும்படி வேண்டுகோளாக அவர் கேட்டு கொண்டார். இந்த சூழலில், ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது.

இதன்படி, இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படையினர் சிறை பிடித்துள்ளனர்.


மக்கள் கருத்து

இந்தியன்Apr 19, 2024 - 01:13:46 PM | Posted IP 162.1*****

ஈரான் மதவெறி பிடித்த பாக்கிஸ்தான் நாடு மாதிரி அறிவும் இருக்காது, மூளையும் இருக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory