» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா வருவதை தள்ளிவைத்த நிலையில் சீனாவுக்கு எலான் மஸ்க் திடீர் பயணம்!
திங்கள் 29, ஏப்ரல் 2024 9:04:39 AM (IST)
இந்தியா பயணத்தை தள்ளிவைத்த நிலையில் எலான் மஸ்க் திடீர் பயணமாக சீனா சென்றுள்ளார்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இவர் தன்னுடைய தொழில் நிறுவனங்களை தொடங்க ஆர்வம் காட்டி வரும்நிலையில் கடந்த வாரம் எலான் மஸ்க் இந்தியா வருவதாக கூறப்பட்டது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார்லிங்க் குறித்தான அறிவிப்புகளுடன் இவருடைய இந்திய பயணம் அமையும் எனவும் இந்தப்பயணத்தில் பிரதமர் மோடியையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்பட்டது.
இதனால் நாட்டின் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் பெருமளவு அதிகரிக்கும் என பேசப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்திய பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்த நிலையில் அவரின் இந்திய பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, "முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தியா பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகிவிட்டது. இந்தாண்டு (2024) இறுதிக்குள் கண்டிப்பாக இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்” என்றார்.
இந்தநிலையில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் திடீர் பயணமாக நேற்று சீனா சென்றார். தன்னுடைய சொந்த ஜெட் விமானம் மூலம் பீஜிங் சென்றுள்ள அவரை சீன அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் வரவேற்றனர். ஏற்கனவே சீனாவில் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய விற்பனையை தொடங்கிய நிலையில் தானியங்கி கார்களுக்கான மேம்படுத்தப்பட்ட மென்பொருளை அவர் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா பயணத்தை தள்ளிவைத்த மறுவாரமே மின்சார வாகன சந்தையில் 2-ம் இடத்தில் உள்ள சீனாவுக்கு எலான் மஸ்க் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:46:15 PM (IST)

அகதிகளை ஏற்காவிட்டால் ஜோர்டான், எகிப்து நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தப்படும் : டிரம்ப்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:28:10 AM (IST)

மெக்சிகோவில் லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 41 பேர் உயிரிழப்பு
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:19:55 AM (IST)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!
சனி 8, பிப்ரவரி 2025 10:40:08 AM (IST)

அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகல்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு சூறை
வியாழன் 6, பிப்ரவரி 2025 10:21:45 AM (IST)
