» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் நம்பமுடியாத பணிகளை மோடி செய்துள்ளார்: அமெரிக்க சி.இ.ஓ., புகழாரம்
வியாழன் 25, ஏப்ரல் 2024 12:06:45 PM (IST)

இந்தியாவில் நம்பமுடியாத பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார். அதில் கொஞ்சமாவது, அமெரிக்காவில் நாம் செய்வது அவசியம்,'' என, அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பொருளாதார மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் பேசியதாவது: இந்தியாவில் நம்பமுடியாத கல்வி முறையையும், அடிப்படை கட்டமைப்பையும், பிரதமர் மோடி தந்திருப்பது நம்பமுடியாத பணி. அதில் சிறிதாவது, அமெரிக்காவில் நாம் செய்யவேண்டிய தேவை உள்ளது. 40 கோடி மக்களை அவர் வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.
நாம் மோடியைப் பற்றி நிறைய பேசலாம். 40 கோடி மக்கள் கழிவறை வசதி பெற்றுள்ளனர். இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன என்பது பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்.இந்தியாவில், 70 கோடி மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். இதன் வாயிலாக பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
ஒரு மனிதரின் உறுதி காரணமாக, ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றி உள்ளனர். பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை உடைத்த மோடி உறுதி படைத்தவர். அவர் செய்தவற்றில், சிலவற்றை அமெரிக்காவில் நாம் செய்வது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
Common ManApr 28, 2024 - 08:25:17 AM | Posted IP 162.1*****
World level liar is modi ji..
தமிழன்Apr 27, 2024 - 10:15:22 AM | Posted IP 172.7*****
எதுவும் மக்களுக்கு செய்யாம வெறும் போட்டோ நியூஸ் மட்டும் போட்டு பாப்புலாரிட்டி தேடுகிட்டு அலையுற சங்கிகளா. உண்மை பத்து வருடமா எதுவும் செய்யவில்லை. முதல்ல உன் பிரதமற்ர மணிப்பூர் லபோய் சண்டையை நிப்பாட்ட சொல்லுடா சாங்கி
ஜேமி டைமன் பேசியதாவதுApr 25, 2024 - 02:59:04 PM | Posted IP 172.7*****
உலகம் முழுவதும் மோடிஜியின் திறமையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் . ஆனால் இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை......
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம்: உக்ரைன் உறுதி!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:43:26 PM (IST)

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 35 பேர் உயிரிழப்பு; மீட்புப்பணிகள் தீவிரம்!
திங்கள் 17, மார்ச் 2025 5:47:47 PM (IST)

கனடாவின் மார்க் கார்னியின் அமைச்சரவையில் 2 இந்திய பெண்களுக்கு வாய்ப்பு
திங்கள் 17, மார்ச் 2025 12:25:02 PM (IST)

வெற்றிகரமாக சென்றடைந்தது குரூ டிராகன்: பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
திங்கள் 17, மார்ச் 2025 9:02:42 AM (IST)

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:48:15 PM (IST)

உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் இந்தியா முன்னணி : ஐ.நா. அறிக்கை
சனி 15, மார்ச் 2025 5:06:50 PM (IST)

கந்தசாமிApr 28, 2024 - 12:04:19 PM | Posted IP 162.1*****