மறைந்த கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்தின்போது அவரது உடலைச் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு காலமானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த முதலமைச்சர் விஜய், நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அப்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து வி.எஸ். பாபுவின் உடலை முதலமைச்சர் விஜய் தனது தோளில் சுமந்து சென்றார். சக நிர்வாகியின் இறுதிப் பயணத்தில் முதலமைச்சர் நேரில் பங்கேற்று உடலைச் சுமந்து சென்ற நிகழ்வு, அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

