தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரத்தில் உள்ள நினைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்குத் திருநெல்வேலி தக்ஷிண மாற நாடார் சங்கத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் ராஜகுமார் முன்னிலையில், வெங்கடேஷ் பண்ணையாரின் உருவப்படத்திற்கும் நினைவிடத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் சௌந்தர்ராஜ், நயினார், கருணாகரன், சதீஷ் குமார், செந்தமிழ் சேகர், ராகவன் மற்றும் நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், காளிமுத்து உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.