தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கைலாசம் (43). இவரது மனைவி கஸ்தூரி (30). இந்தத் தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கஸ்தூரிக்கும் வேல்முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது குறித்துத் தெரிந்த கைலாசம், வேல்முருகனைக் கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி கஸ்தூரி தனது 3-வது குழந்தையை அழைத்துக்கொண்டு வேல்முருகனுடன் சென்றுவிட்டார். இது குறித்துக் கைலாசம் தட்டித் கேட்டபோது, கணவன் என்றும் பாராமல் கஸ்தூரி அவரை மிகக் கொச்சையாகப் பேசி அவதூறாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கைலாசம், வீட்டில் இருந்த ஏராளமான மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் வசித்து வந்த கைலாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து, கைலாசத்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி கஸ்தூரி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.