தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடந்த 13.10.2026 அன்று மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் முயற்சிகள் மற்றும் மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் தூதரக நடவடிக்கைகள் வாயிலாகச் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த 08.11.2026 அன்று தாயகம் திரும்பினர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இன்று (10.11.2026) தருவைக்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விடுவிக்கப்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள்அந்தோணி ராஜ், மிக்கேல் சாம், அமல்ராஜ் ஆகிய 3 பேரும் ஆட்சியரை நேரில் சந்தித்துத் தங்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்தமைக்காகத் தங்களது ஆழமான நன்றியைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான்,ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஐய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

