தூத்துக்குடி அய்யனார்புரம் 110/22-11 கே.வி. துணைமின் நிலையத்தில் பாராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், நகரம் விநியோகச் செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி அய்யனார்புரம் 110/22-11 கே.வி. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் வரும் 12.11.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர், சுனாமிநகர், நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோவில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, தூப்பாஸ்பட்டி, வெள்ளப்பட்டி, தருவைகுளம்,

பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டினமருதூர், உப்பளப்பகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், மேலமருதூர், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்காபுரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையார்காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.