தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திருநெல்வேலி வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட பல்வேறு திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள 55 வணிகமனைகளை வாங்குவதற்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 9-ம் தேதி (09.10.2026) இறுதி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிக்குற்குட்பட்ட கீழநத்தம் பகுதி – I, பாளை பகுதி – I & II, தென்காசி, வல்லன்குமாரன்விளை, வி.எம்.சத்திரம் நிலை - II, குலவணிகர்புரம் (TNUDP), சங்கரப்பேரி (TNUDP), மீளவிட்டான் (TNUDP), நாரணம்மாள்புரம் திட்டப்பகுதி I மற்றும் நாரணம்மாள்புரம் பகுதி II (TNUDP) திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள 55 வணிகமனைகளை (Commercial plots) மனைகளை ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், https://tnhb.tn.gov.in/ என்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக வணிகமனைகளுக்கான விற்பனை விவரங்களை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் வணிகமனைகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பம் செய்ய 09.10.2026 கடைசி நாளாகும். எனவே தகுதியுடைய பொதுமக்கள் விரைவாக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு திருநெல்வேலி வீட்டுவசதிப் பிரிவுச் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

