இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:"வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்." இவ்வாறு முதல்வர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.