தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 'அர்னாப்' புயல் எச்சரிக்கை காரணமாகக் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 28-ஆம் தேதி புயல் கரையைக் கடந்த நிலையில், மீனவர்கள் மீண்டும் உற்சாகத்துடன் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள் நேற்று சனிக்கிழமை கரை திரும்பின. கரையில் மீன்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் மீன்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிக அளவில் திரண்டனர்.

சீலா மீன் கிலோ ரூ. 800 முதல் ரூ. 1,000 வரையும், விளை மீன் ரூ. 500, பாறை மீன் ரூ. 450, ஊளி மீன் ரூ. 400, நண்டு ரூ. 900, ஐலேஷ் ரூ. 220, வங்கனை ரூ. 130, கிளைவாழை ரூ. 240 வரையும் விற்பனையானது.

மீன்கள் கணிசமான அளவில் கிடைத்ததோடு, சந்தையில் எதிர்பார்த்ததை விட நல்ல விலைக்கு விற்பனையானதால் திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.