பெங்களூரு கன்டோன்மென்ட் மற்றும் தூத்துக்குடி இடையேயான தற்காலிகப் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பெங்களூரு கன்டோன்மென்ட் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (ரயில் எண் 06533) வருகிற 06.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 09:45 மணியளவில் பெங்களூரு கன்டோன்மென்ட் இரயில் நிலையத்திலிருந்து புறப்படும். 07.11.2026 (சனிக்கிழமை) மதியம் 12:30 மணியளவில் தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் பெங்களூரு கன்டோன்மென்ட்டிலிருந்து புறப்பட்டு ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய முக்கிய இரயில் நிலையங்கள் வழியாகத் தூத்துக்குடியைச் சென்று அடையும்.

இச்சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் விரைந்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு இரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.