தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், ஏரல், தென்திருப்பேரை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வல்லக்குளம், உமரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.11.89 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் இன்று (31.10.2026), சாயர்புரம், ஏரல், தென்திருப்பேரை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வல்லக்குளம், உமரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.11.89 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகளுக்காக புதியதாக கட்டப்பட்டுள்ள 2 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினையும்,

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கனிம வள நிதி மற்றும் பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும்,

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலக கட்டடத்தையும், ஏரல் வட்டம், உமரிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.49.48 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடத்தையும்,

தென்திருப்பேரை இரண்டாம் நிலை பேரூராட்சி பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலகத்திற்கான கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வல்லக்குளம் ஊராட்சி, அரியநாயகிபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.9.8 இலட்சம் மதிப்பீட்டில் அரியநாயகிபுரம், அரசன்குளம், அய்யனார்குளம்பட்டி ஆகிய கிராமத்தில் உணவு தானிய கிடங்கிற்கான புதிய கட்டடத்தையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), திருநெல்வேலி மண்டலம் சுஷம்மா, உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன், சாயர்புரம், ஏரல், தென்திருப்பேரை செயல் அலுவலர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.