தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வேத கோவில் தெரு, மகாராஜன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சக்திபாலன் (39). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு, அதன் காரணமாக அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் முற்றிலும் செயலற்று இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இவர் அதிகளவிலான மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சூழலில் சக்திபாலன் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், வீட்டில் இருந்த மர ஸ்டாண்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

