அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்தடுத்த கட்டங்களில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையொட்டி, கடல் பகுதியில் புயல் உருவாகக்கூடிய சாதகமான சூழல் நிலவுவதையும், காற்று வீசத் தொடங்குவதையும் உணர்த்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை அடுத்து, கடலுக்குச் செல்லும் மீன்பிடிப் படகுகள் மற்றும் கப்பல்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.