திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.
திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்றது. சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, தலைமை தாங்கி, முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை நேரடியாகப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி சரக எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று ஒரே நேரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களில் பொதுமக்கள் தரப்பிலிருந்து மொத்தம் 184 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

