எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தனது 50 ஆவது பிறந்த நாளையொட்டி உதயநிதி ஸ்டாலின், சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தனர். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.