தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி, மறவர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பேச்சிமுத்து (24). இவர் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததோடு, சிறுமி மற்றும் அவரது தாயாருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பேச்சிமுத்துவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

