திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தங்கியிருக்கும் 70 வயதான மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் தங்கள் வசமிருந்த ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கிழித்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், அவரது 40 வயது மகனும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் தங்கள் வசம் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைத் திடீரெனக் கிழித்து அங்கு வீசியுள்ளனர்.

கோயில் வளாகத்தில் ரூபாய் நோட்டுகள் கிழித்துப் போடப்பட்டிருந்ததைக் கண்ட பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. அவர்கள் எதற்காக இவ்வாறு ரூபாய் நோட்டுகளைக் கிழித்துப் போட்டனர் என்பது குறித்துப் பல்வேறு தரப்பினரும் விசாரித்து வருகின்றனர்.