தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியிடங்களின் விவரம்:

2026-ஆம் ஆண்டிற்கான TNPSC ஆண்டு அட்டவணையின்படி, கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

291 கிராம நிர்வாக அலுவலர் (VAO)

3,798 இளநிலை உதவியாளர்

107 வரி வசூலிப்பவர்

97 வரி தண்டலர்

1,572 தட்டச்சர்

404 சுருக்கெழுத்து தட்டச்சர்

60 நேர்முக எழுத்தர்

40 வனக்காவலர் மற்றும் முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

என மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

கடைசி நேரத்தில் குவிந்த விண்ணப்பங்கள்:

விண்ணப்பிக்கக் கடைசி நாளாக முதலில் நவம்பர் 5 அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்க் போட்டித் தேர்வுகளுக்கான உச்ச வயது வரம்பை அரசு உயர்த்தியதால், கூடுதல் விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் கடைசி தேதி நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டது.

விண்ணப்பப் பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 14,89,025 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பணியிடத்திற்கு 226 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி வரை 9.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில், கடைசி 4 நாட்களில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தம் செய்ய அவகாசம் & தேர்வு தேதி: விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் (Correction Window) செய்ய விரும்புபவர்களுக்கு வரும் நவம்பர் 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கு இன்னும் 61 நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.