தூத்துக்குடி மட்டக்கடை திருநாவுக்கரசர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் அறக்கட்டளை சார்பில் வள்ளலார் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்குச் சரவணாஸ் ஹோட்டல் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி தாளாளரும் வழக்கறிஞருமான சொர்ணலதா, தெப்பக்குளம் சுந்தரபாண்டி விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் தர்மசாலை நிர்வாகி வெங்கடசலபதி ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

பொதிகை ஸ்வீட்ஸ் உரிமையாளரும் வழக்கறிஞருமான ஜோதி குமார் விழாவில் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, புலவர் பே. சங்கரலிங்கம் நடுவராகப் பொறுப்பேற்று நடத்திய சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் தெய்வநாயகம், மீனாட்சி நாதன், மகேஷ் உட்பட ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.