தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் மற்றும் தி.மு.க. கழகத்தின் 78-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கிச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்பாகம் காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்குச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் கழகத்தின் 78-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 60 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியினை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்டப் பொருளாளர் சுசி ரவீந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவீந்திரன், மாநகரத் துணைச் செயலாளர் முருக இசக்கி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், கீதா முருகேசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில்
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் சார்பில் மாவட்டத் தலைவர் முனியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால் ரவீந்திரன், நிர்வாகிகள் பொன்ராஜ், கோபால்சாமி, பெரியார் தாசன், சக்திவேல், ஜோசப் அன்பழகன், வழக்கறிஞர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

