திருநெல்வேலி சரகக் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்று விசாரணைக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீவிரமாகப் பரிசீலித்த அதிகாரிகள், அவற்றில் 8 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தனர்.
எஞ்சியுள்ள 252 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் அதிகாரிகள் துரிதமாக விசாரணை நடத்தி, விரைந்து தீர்வு காண வேண்டும் என டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு அறிவுறுத்தியுள்ளார்.

