தூத்துக்குடியில் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஒ.பி.சி. அணி மாவட்டப் பொதுச்செயலாளரும், மாவட்டச் செயலாளருமான வன்னியராஜா ஏற்பாட்டின் பேரில் 15-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமன், காளிராஜா, மாவட்டப் பொருளாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கிழக்கு மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம், வடக்கு மண்டலத் தலைவர் சங்கர்ராஜன், வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம்பிரபு, ஆன்மீகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் உஷாதேவி, முன்னாள் வடக்கு மண்டலத் தலைவர் சுதா, பிரச்சாரப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சொக்கலிங்கம், பிரச்சாரப் பிரிவு மாவட்டச் செயலாளர் அனுசுயா, சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் ஞானப்பிரகாசம், அயலகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் மாரியப்பன், கிழக்கு மண்டலப் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், வடக்கு மண்டலப் பொறுப்பாளர் சரவணகுமார், மேற்கு மண்டலச் செயலாளர் இசக்கிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர மாவட்டத் துணைத் தலைவர் ஆதிநாதன் ஆழ்வார், மாவட்டச் செயலாளர் எல்.ஆர். சரவணகுமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோபி, வடக்கு மண்டலத் தலைவர் பாலமுருகன் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள், ஆலயப் பொறுப்பாளர்கள் உட்படப் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

