தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் உள்ள நீதிமன்றம் பகுதி அருகே இன்று மாலை அரசுப் பேருந்து ஒன்று அவ்வழியே வந்த இன்னோவா கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இன்னோவா காரின் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இருப்பினும், காரில் இருந்தவர்களும் பேருந்துப் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர்.

விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலையப் போலீசார் உடனடியாக இடத்திற்கு வந்து போக்குவரத்தைச் சரிசெய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மற்றும் இன்னோவா காரைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.