உலக ஓசோன் தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலக் கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் (கண்காணிப்பு) டாக்டர் குணசேகரன் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து, ஆலையின் உற்பத்திப் பிரிவில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்ப உபகரணங்களை நேரில் ஆய்வு செய்த அவர், பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி ஆவணப்படுத்தி வரும் ஆலை நிர்வாகத்தைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலை மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) கோ. ஸ்ரீனிவாசன் மற்றும் உதவித் தலைவர் (உற்பத்தி) சுரேஷ் ஆகியோர், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தவும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் (Single-use Plastic) பயன்பாட்டைத் தவிர்க்கவும் பணியாளர்களை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மூத்த பொது மேலாளர் கேசவன் மற்றும் பொது மேலாளர் ரவிக்குமார் ஆகியோரது ஏற்பாட்டில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
மேலும், ஆலை பணியாளர்களுக்கு "புவியைக் குளிரூட்ட உலகளாவிய நடவடிக்கை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலையின் சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடர்புத் துறையினர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஆலையின் மூத்த அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

