தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் நேற்று போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்களிடம் தகராறு செய்து, பணம் கேட்டு மிரட்டலில் ஈடுபட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தைச் சோ்ந்த பிரியன் (20), கோகுல்ராம் (23), பூபாலராயர் புரத்தைச் சோ்ந்த முகமது நசீா் (23), லூா்தம்மாள் புரத்தைச் சோ்ந்த வளன் அந்தோணிசாமி (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.