தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தினருடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், இன்று மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வு எடுத்துள்ளனர்.
இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 272 விசைப்படகுகள் பாதுகாப்பாகக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பண்டிகை முடிந்து மீண்டும் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

