தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 86.3 மி.மீ. கனமழை பதிவாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சேரகுளத்தில் 60.0 மி.மீ. மழையும் பதிவாகி மிதமான மழையாகப் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடியில் 16.05 மி.மீ., விளாத்திகுளம் பகுதியில் சராசரியாக 15.65 மி.மீ., கயத்தாறு பகுதியில் 16.79 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்த மாவட்ட சராசரி மழையளவு 14.19 மி.மீ. எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

