தூத்துக்குடி மில்லர்புரம், பர்மா காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கைலாசம் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கு இடையே தவறான தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலையில் அவரது மனைவி அந்த நபருடன் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கைலாசம், நேற்று இரவு தனது உறவினர் கதிரவேல் நகர் ஆர்.சி. சர்ச் எதிரே நடத்தி வரும் பழைய வேஸ்ட் பேப்பர் குடோனுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கைலாசத்தைக் காணாமல் உறவினர்கள் தேடி வந்தநிலையில், குடோன் முன்னால் அவரது ஆட்டோ நிற்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்து உடனடியாகக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் நிலையப் போலீசார், கைலாசத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.