தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சேர்ந்தவர் கோவில்பிள்ளை மகன் அந்தோணி ராஜா (65). இவர் நேற்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 9 மீனவர்களுடன் சேர்ந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

மீன்பிடித்துவிட்டு இரவு சுமார் 8:00 மணி அளவில் மீன்பிடி துறைமுகத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது, கடலில் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தோணி ராஜா கடலில் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாகப் படகில் இருந்த சக மீனவர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கடலில் கிடைக்கவில்லை. விசைப்படகின் உதவியுடன் தொடர்ந்து தேடி வந்த நிலையில், இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கடலோரக் காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.