தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடுவோர் மீது மாவட்ட காவல் துறை தீவிரக் கண்காணிப்பு நடத்தி வருகிறது.
அரிவாள் போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் தோன்றி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியவர்களைச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் மீது அவதூறாகவும், மோதலைத் தூண்டும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட நபர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை 80-க்கும் மேற்பட்ட சமூக வலைதளப் பக்கங்களைச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

