தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரப்பேரி மார்ட்டினா நகர், மாப்பிள்ளையூரணி சந்திப்பு அருகே புதிய டாஸ்மாக் ஒயின் ஷாப் இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒயின்ஷாப்பிற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடையைத் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி நலச்சங்கத் தலைவர் மாறன் என்பவர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கடையின் வாசலிலேயே அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபெருமாள் மற்றும் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் எதிரொலியாக மதுக்கடை மூடப்பட்டது.

