தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பண்டிகை களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாகப் பட்டாசு விற்பனையும் தீவிரமடைந்துள்ளது.
தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் அமைந்துள்ள பிரபல ஓம் சக்தி பட்டாசு கடையில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. பண்டிகையை ஒட்டி இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் திரண்டு வந்து தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
சிறிய வகைச் சரவெடிகள், மத்தாப்புகள் முதல் பிரம்மாண்டமான வானவெடிகள் வரை அனைத்து ரகங்களும் தடையின்றி ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். கடையின் முன்புறம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

