தூத்துக்குடியில் நாளை மறுநாள் (நவம்பர் 19) மடத்தூர், மில்லர்புரம், அண்ணாநகர், தட்டப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி நகர் விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சிப்காட் 110/22 கே.வி. துணை மின்நிலையம் மற்றும் 110/33-11 கே.வி. கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி (19.11.2026) வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளன.
இதனால் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:
சிப்காட் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3-வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி (EB காலனி), ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள்,
ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எஃப்.சி.ஐ. குடோன் (FCI குடோன்) பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்காபரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தின நகர், பாளையாபுரம், வி.எம்.எஸ். நகர், நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி,
காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி (NGO காலனி), அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி (TMB காலனி), அண்ணாநகர் 2-வது நகர் மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின்ரோடு, டிமார்ட், கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்: வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாக்குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி மகிழம்புரம், தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பருப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், கைலாசபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
எனவே, பொதுமக்கள் தங்களது மின்தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்வாரியப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

