தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று (நவம்பர் 17) நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை அவர் பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்து, காவல் அலுவலர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வழிகாட்டினார்.

இந்நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துறைசார் காவலர்கள் உடனிருந்தனர்.