தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனியார் கட்டிடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடர்பாக வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள்சாமி மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் வழக்கறிஞருமான செல்வின் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

இச்சம்பவம் தொடர்பாக, தவெக கட்சி நிர்வாகி வழக்கறிஞர் செல்வின் அளித்த புகாரின் பேரில் குற்ற எண் 705/2026-ன் கீழ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி மற்றும் அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அர்ச்சனா தரப்பில் அளித்த புகாரின் பேரில் குற்ற எண் 706/2026-ன் கீழ் தவெக நிர்வாகி வழக்கறிஞர் செல்வின் மீதும் எதிர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.