தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த தெய்வசெயல்புரம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமண பெருமாள் என்பவரது மகன் நல்லபெருமாள் (22). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்தும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ ஒன்றை ஸ்டோரியாகப் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலையக் காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும் வகையிலும் பதிவிட்ட நல்லபெருமாளை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.