நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முடக்க கூடாது, மழைக்கால வெள்ளப்பெருக்கு அவசர தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஒன்றிய.மாநில அரசுகள் நிதி ஆணைய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், கவுன்சிலர்கள் வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகளுக்கான நிதியை தாமதிக்காமல் உடனடியாக ஒதுக்க வேண்டும், உள்ளாட்சி ஜனநாயகத்தை பறிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் நகர குழு உறுப்பினர்கள் முருகன்,அந்தோணி செல்வம் ஆகியோர் உரையாற்றினர். கோரிக்கைகள் அடங்கிய மனுவானது நகராட்சி கணக்கீட்டு அலுவலரிடம் அளிக்கப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகர குழு உறுப்பினர்கள் தினேஷ் குமார், வேலுச்சாமி, கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

