கடந்த 21ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் தீவு அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனைத் தொடர்ந்து கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காட்சி வீச கூடும் என்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சொல்லலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று இரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று 25ஆம் தேதி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 207 விசை படகுகளில் காலை 5 மணிக்கு மீன் பிடிக்க உற்சாகமாக சென்றனர்.