சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஆயுர்வேத கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (பொறுப்பு) வைகுண்ட ரமணி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் நன்மைகள், தினசரி வாழ்வில் ஆயுர்வேத வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் பொதுமக்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் வகையில் அரிய வகை மூலிகை மரக்கன்றுகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வைகுண்ட ரமணி பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் மருந்தாக்கியல் துறை ஒருங்கிணைப்பாளர் ரூபன் கிங்ஸ்லி, சித்த மருத்துவ அலுவலர்கள் ஜெகதீஷ் குமார், கலைச்செல்வி மற்றும் மருந்தாளுநர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேரிலோவன்பட்டியில் ஆயுர்வேத முகாம்:

இதேபோல், பேரிலோவன்பட்டி அரசு ஆயுர்வேத மருத்துவப் பிரிவு சார்பில் நல்லழகு நாடார் பள்ளியில் சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் வழங்கப்பட்டன.