தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). கூலித் தொழிலாளியான இவர், பள்ளியன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.

இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.