ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3212-ஐச் சேர்ந்த ரோட்டரி பேர்ல்சிட்டி தூத்துக்குடி சங்கத்தின் சார்பில், தீபாவளி குடும்ப சங்கம விழா பாம்ஸ் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரோட்டரி பேர்ல்சிட்டி சங்கத் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
மண்டலம் 31-ன் உதவி ஆளுநர் பி. சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏ.பி.சி. வீரபாகு மகாலெட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த வி. மாரிச்செல்வி கலந்துகொண்டார். அவர் குடும்ப நல்லிணக்கம், சமூக சேவை மற்றும் பண்டிகைகளைக் குடும்பத்துடன் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்களான தெய்வசிகாமணி, பாலமுருகன், அபு தாமஸ், விக்டர், விக்னேஷ், சுரேஷ், கங்கா, வெங்கடேஷ், மாரீஸ்வரன், மூர்த்தி, எஸ். கண்ணன், ஃபைசர், செந்தில் வீரபாகு, கோகுல கிருஷ்ணன், சீனியப்பன், ஆசிர், ஆஷிக், அரவிந்த், ஜெய விக்னேஷ், ராமலிங்கம், கிறிஸ்டோபர், ரமேஷ், பாலு தினகரா, ஜெகநாதன், உஸ்மான், சிவா, சுஷில்குமார், இம்மானுவேல், கார்த்திகேயன், நெல்லையப்பன், எஸ்.ஆர்.எஸ். பாலாஜி ஆகியோருடன் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளுக்கு ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும் சங்கச் செயலாளர் ரோட்டேரியன் ஆர். கணபதி நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பரஸ்பர தீபாவளி வாழ்த்துப் பகிர்வு மற்றும் சுவையான இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

