தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் நிர்வாக நலன் கருதி, தனிப்பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் உட்பட 12 பேரைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்கள் மற்றும் விருப்ப மாறுதல் கோரியவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு: தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன் – கோவில்பட்டி தனிப்பிரிவுக்கும், கோவில்பட்டி தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. சேர்மராஜ் – புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தாளமுத்துநகர் ஏட்டு முருகேசன் – புதுக்கோட்டை காவல் நிலைய தனிப் பிரிவுக்கும், பசுவந்தனை ஜார்ஜ் கலைச்செல்வன் – எட்டயபுரத்திற்கும், தட்டப்பாறை ராஜா – தென்பாகம் காவல் நிலையத்திற்கும், குளத்தூர் அந்தோணி செல்வன் – திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புதுக்கோட்டை ஏட்டு ரவிக்குமார் – தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கும், முறப்பநாடு ராம்குமார் – தூத்துக்குடி தலைமையிடத்திற்கும், குளத்தூர் பொன்குமார் – தருவைகுளத்திற்கும், தென்பாகம் ஜான்சன் – தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கும், எட்டயபுரம் அருணாசலம் – ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கும், புதூர் முனியசாமி – குளத்தூர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.