தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் (ACTU), இன்று (19.11.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பிரிவின் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து, காவல் அலுவலர்களுக்குப் உரிய அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மற்றும் காவல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

