தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சியின் 11 மற்றும் 12-வது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் இம்மானுவேல், அன்புராஜன், எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

