தூத்துக்குடி தாளமுத்துநகர், கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் மகன் ஜெகன் மாறன் (26). இவர் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார். நேற்று ஜெகன்மாறன் காரை ஓட்டிக்கொண்டு, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாலசமுத்திரம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜெகன்மாறன் காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகன்மாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க்பபட்டது இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

